Last Updated : 02 May, 2015 05:27 PM

 

Published : 02 May 2015 05:27 PM
Last Updated : 02 May 2015 05:27 PM

பூகம்ப பூமியில் புது நம்பிக்கையை விதைத்த திருமணம்

நிலநடுக்கத்தால் சிதைந்து கிடைக்கிறது நேபாளம். எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை மட்டுமே உடைமைகளாக வைத்துக் கொண்டு உதவிகளுக்காக காத்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் நிலநடுக்கத்தால் நின்று போன திருமணத்தை நேற்று நடத்தி முடித்திருக்கின்றனர். யூஜின் புரோவோஸ்த், தீபேஷ் முனாகமி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அன்றுதான் நேபாளத்தை அந்த பூகம்பம் புரட்டிப்போட்டது.

இந்நிலையில், பூகம்பம் தாக்கி 6 நாட்களுக்குப் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யூஜினும், நேபாளத்தைச் சேர்ந்த தீபேஷ் முனாகமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சி மிகவும் எளிமையாகவே நடந்தது.

இது குறித்து மணப்பெண் யூஜின் கூறும்போது, "நான் லண்டனைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக பணியாற்றுகிறேன். இத்துயர தருணத்திலும் இந்த திருமணத்தை செய்து கொள்வதால் துயரங்களை எதிர்கொள்ளும் தைரியம் மனித குலத்துக்கு இருப்பதை உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x