Published : 17 Apr 2015 05:52 PM
Last Updated : 17 Apr 2015 05:52 PM
சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரில் குளோரின் வாயு குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ரசாயான குண்டுகளால் பாதிக் கப்பட்டு 1,2,3 வயது குழந்தைகள் உயிருக்குப் போராடி மரண மடைந்த வீடியோவைப் பார்த்த ஐ.நா. பிரதிநிதிகள் கண்கலங்கினர்.
சிரியாவின் இட்லிப் மாகாணத் தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சர்மின் கிராமத்தின் மீது கடந்த மார்ச் 16-ம் தேதி ஹெலிகாப்டரி லிருந்து குளோரின் பேரல் குண்டு கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
ரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தவில்லை என சிரிய ராணுவமும், கிளர்ச்சிப்படை களும் மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அங்கு நடைபெறும் போரில் ராணுவத் தரப்பில் மட்டுமே ஹெலிகாப்டர்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், சிரிய ராணுவம்தான் குளோரின் பேரல் குண்டுகளை வீசியிருக்கிறது என கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குளோரின் தடை செய்யப்பட்ட பொருள் அல்ல என்றாலும், அதனை ரசாயன ஆயுதங்களில் பயன்படுத்துவது 1997-ம் ஆண்டு ரசாயான ஆயுதங்கள் உடன்படிக் கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் சிரியா 2013-ம் ஆண்டு இணைந் துள்ளது.
இந்நிலையில், சர்மின் கிராமத் தின் மீது நடத்தப்பட்ட குளோரின் பேரல் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், பாட்டி மற்றும் 1,2,3 வயதான குழந் தைகள் பாதிக்கப்பட்டனர். அவர் கள் அருகிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட் டனர். ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
இச்சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் போட்டுக்காண்பிக்கப்பட்டது.
குழந்தைகளும் பெற்றோரும் சிகிச்சை பெற்ற மருத்துவமனை யின் இயக்குநர் முகமது தென்னாரி, மருத்து சங்க தலைவர் ஜாஹெர் சஹ்லவுல், ரசாயன குண்டு தாக்குதலில் பிழைத்த குவாஸி ஜக்காரியா ஆகியோர் அமெரிக்க அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவரித்தனர்.
அப்போது அந்த வீடியோவைப் பார்த்த ஐ.நா. பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கண் கலங்கினர்.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர் கூறும்போது, “இந்த கூட்டம் அதிக உணர்ச்சிப்பெருக்குடன் நடந்தது. அங்கு கண்கலங்காதவர்களையே பார்க்க முடியவில்லை. பெரும் பாலானவர்கள் வாய்விட்டே அழுதுவிட்டனர். இத்தாக்குதலுக் குக் காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
குளோரின் ரசாயன குண்டு சிரியாவில் பயன்படுத்தப்படுவதை ஐ.நா பாதுகாப்புக்குழு கண்டித்த 10 நாளில் சர்மின் கிராமத்தின் மீது குளோரின் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, `ஐ.நா. தனது நடவடிக்கையைத் தொடங்கும் முன் குளோரின் குண்டை பயன் படுத்தியது யார் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என ரஷ்யா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT