Published : 11 Apr 2015 10:55 AM
Last Updated : 11 Apr 2015 10:55 AM
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்றுடன் அங்கு இந்தியா மேற் கொண்டு வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், அங்குள்ள இந்தியத் தூதரகமும் மூடப்பட்டது.
இந்திய வெளியுறவுத் துறை யின் முயற்சியால் ஏமனில் இருந்து 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்களும், 4,640 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுற வுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில், கூறும்போது, "ஏமனில் மீட்பு பணிகள் நிறை வடைந்துவிட்டன. இந்த பணிக்கு பொறுப்பேற்ற வி.கே.சிங் இன்று இரவு இந்தியா திரும்புவார். இத் துடன் அங்கிருக்கும் நமது தூதர கமும் மூடப்படுகிறது" என்றார்.
முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர் பாளர் சையத் அக்பருதீன் ட்விட்ட ரில் கூறும்போது, கடந்த வியாழக்கிழமை ஏடன் துறைமுகத்தில் குண்டுவீச்சு நடை பெற்றது. அதைத் தொடர்ந்து அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தது. விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கப் பட்டதில் இருந்து இதுவரை 18 விமானங்கள் மூலம் சுமார் 2,900க்கும் மேற்பட்ட இந்தியர்களை சனாவில் இருந்து மீட்டுள்ளோம்.
தவிர, கடந்த மார்ச் 31ம் தேதி முதல் இந்திய கடற்படை கப்பல்கள் மூலமாக ஏடன், அல் ஹுதாய்தா மற்றும் அல் முக்காலா ஆகிய துறைமுகங்களில் இருந்து 1,670 இந்தியர்கள் மீட்கப்பட் டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT