Published : 20 Apr 2015 03:46 PM
Last Updated : 20 Apr 2015 03:46 PM
லிபியாவில் 28 கிறிஸ்தவர்களை படுகொலை செய்து அதன் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.
இதற்கான வீடியோ உறுதிபடுத்தாத போதிலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்யும் தொனியிலேயே வீடியோக் காட்சிகள் உள்ளதால், அந்த இயக்கத்தினர் இராக், சிராயாவைத் தாண்டி உள்நாட்டுப் பிரச்சினையில் இருக்கும் லிபியாவிலும் முன்னேற ஆரம்பித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
லிபியாவில் சிறைபிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் 30 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்யும் வீடியோ பதிவு வெளியானது. அதில், 12 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொரு இடத்தில் 16 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் காட்சிகள் இடம்பெற்றன. இந்தப் படுகொலை எங்கு, எப்போது நடத்தப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை.
வீடியோவில் வழக்கம் போலான கருப்பு நிற உடைகளுடன் முகமுடி அணிந்த தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை கொன்றனர். இதைத் தவிர ஐ.எஸ். இயக்கத்தின் கொடியும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோக் காட்சி வெளியானது குறித்து அமெரிக்காவும் ஐ. நா-வும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தப் படுகொலை, அரசியல் தெளிவற்ற லிபியாவின் சூழல் கண்காணிக்க வலியுறுத்துவதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பெர்னாடேட் மீஹன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT