Published : 04 Apr 2015 10:41 AM
Last Updated : 04 Apr 2015 10:41 AM
பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தியபோது மக்களின் மறைவிடம் குறித்து நேரலையாக செய்தி ஒளிபரப்பிய டி.வி. நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸை தலைமையிடமாக கொண்டு வெளியாகும் சார்லி ஹெப்தோ இதழில் கார்ட்டூன் சர்ச்சை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த அலுவலகம் மீது ஜனவரி 17-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப் பட்டனர். அதைத் தொடர்ந்து பாரீஸில் யூதர் ஒருவர் நடத்தும் சூப்பர் மார்க்கெட் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சூப்பர் மார்க்கெட் தாக்குதலின் போது சிலர் அங்குள்ள குளிர் சாதன பெட்டியில் மறைந்திருந்து உயிர்பிழைத்தனர். ஆனால் தாக்கு தல் நடைபெற்று கொண்டிருந்த போது அவர்கள் மறைந்திருக்கும் செய்தியை பிரான்ஸின் பிஎப்எம் டி.வி நேரலையாக ஒளிபரப்பியது.
இதை எதிர்த்து உயிர் பிழைத்த 6 பேர் பிரான்ஸ் நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடர்ந்துள் ளனர். பத்திரிகை தர்மத்தின் அடிப் படை விதிகளை மீறி எங்களின் மறைவிடம் குறித்து பிஎப்எம் டிவி நேரலையாக செய்தி வெளியிட்டது.
இதனால் எங்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டது என்று 6 பேரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஓராண்டு சிறையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT