Last Updated : 15 Apr, 2015 04:10 PM

 

Published : 15 Apr 2015 04:10 PM
Last Updated : 15 Apr 2015 04:10 PM

லிபிய அகதிகளின் படகு விபத்து: 150 பேர் மீட்பு; 400 பேர் கதி?

லிபியாவிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு குடியேறச் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்ற 400 பேரின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.

லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழலால் அந்நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் சட்டவிரோதமாக ஐரோப்பா நோக்கி 550 பேரை ஏற்றிக் கொண்டு பயணிகள் படகு புறப்பட்டது.

இந்தப் படகு ஞாயிற்றுகிழமை அன்று மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிர் தப்பிய சுமார் 144 பேர் இத்தாலி கடற்படையால் மீட்கப்பட்டனர்.

இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு பணியில் ஈடுபட்ட சேவ் தி சில்ட்ரன் என்ற தன்னார்வு அமைப்பு கூறும்போது, "படகு மூழ்கிய 24 மணி நேரத்தில் 9 உடல்கள் மீட்கப்பட்டன. அதன் பின்னர் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை" என்றார்.

மத்திய தரைக்கடலில் உள்ள மோசமான வானிலை நிலவரத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அபாயகரமானதாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

லிபியாவிலிருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் செல்லும் படகுகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவது வழக்கமாகி வருகிறதும் படகுகளை கடலோர காவல் படையினர் மீட்பதும் வழக்கமாகவே நடந்து வருகிறது.

மத்திய தரைக்கடல் பகுதி வழியாக கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் வரை மீட்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்தது. லிபியாவிலிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பாவுக்கு அகதிகளாக தப்பி வர முயன்றவர்களில் சுமார் 3,500 பேர் கடலில் பல்வேறு விபத்துக்களில் மூழ்கி பலியாகி உள்ளனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x