Published : 02 Apr 2015 08:04 PM
Last Updated : 02 Apr 2015 08:04 PM
ஏமனில் அதிபர் மாளிகையை ஷியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஏடனில் உள்ள அதிபர் மாளிகையை கடும் சண்டைக்குப் பிறகு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
சவுதி அரேபிய படைகள் வான் வழித்தாக்குதல்களை நடத்தி வந்த போதும், இன்று அதிபர் மாளிகையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த மாளிகையில்தான் தற்போது சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ள அதிபர் ஹாதி ஆட்சிப் பீடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT