Last Updated : 04 Apr, 2015 10:43 AM

 

Published : 04 Apr 2015 10:43 AM
Last Updated : 04 Apr 2015 10:43 AM

கடலில் காணாமல் போன அமெரிக்கர் 2 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

கடலில் காணாமல் போன அமெரிக்கர் ஒருவர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

அமெரிக்காவில் வசித்து வருப வர் லூயிஸ் ஜோர்டன் (37). இவர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருந்து வடக்கு கரோலினா நோக்கி படகு ஒன்றில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று படகில் கோளாறு ஏற்பட்டது. அதனால் படகு தலைகுப்புறக் கவிழ்ந்தது. லூயிஸ் ஜோர்டனுக்குப் படகை பழுது நீக்கத் தெரியவில்லை. எனவே, தலைகுப்புறக் கிடத்த படகின் மீதே இருந்து சுமார் 66 நாட்களைக் கழித்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக் கிழமை வடக்கு கரோலினா வழியாகச் சென்று கொண்டிருந்த ஹூஸ்டன் எக்ஸ்பிரஸ் எனும் கப்பல் ஒன்று, நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மேற்கண்ட படகைக் கண்டது.

அதில் உதவிக்காகக் காத்திருக் கும் லூயிஸைப் பார்த்ததும், அமெரிக்க கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தது. உடனே கடலோர பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் லூயிஸைக் காப்பாற்றி, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், கடலோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் பேசும்போது, இந்த நாட்களில், தனது கைகளை மட்டுமே பயன்படுத்தி கடலில் மீன்களைப் பிடித்து உண்டு வந்ததாகவும், மழைநீரைக் கையில் ஏந்தி தனது தாகத்தைத் தணித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x