Published : 25 Apr 2015 07:50 PM
Last Updated : 25 Apr 2015 07:50 PM
ஏமனில் நடைபெற்று வரும் போரில் கடந்த ஒரு மாதத்தில் 550 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 115 பேர் சிறார்கள்.
ஏமனில் சன்னி – ஷியா முஸ்லிம் பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சன்னி பிரிவினருக்கு ஆதரவாக சவுதி அரேபிய ராணுவம் ஏமனில் வான் வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த மார்ச் 26-ம் தேதி நடைபெற்று வரும் இத்தாக்குதலில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைப்பதாக சவுதி அரேபியா கூறி வருகிறது. ஆனால் இது அப்பாவி மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 550 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 115 பேர் சிறார்கள். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர் மேலும் உச்சமடைந்தால் சாவு எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என்று அச்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT