Published : 19 Apr 2015 01:59 PM
Last Updated : 19 Apr 2015 01:59 PM
பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிற சீன அதிபர் ஜி ஜின்பிங் அங்கு வரும் 20ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 20ம் தேதி (திங்கள்கிழமை) பாகிஸ் தான் செல்கிறார். இந்த ஆண்டு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி நாட்டுப் பயணம் இது என்பது குறிப் பிடத்தக்கது. அன்றைய தினத்தில் அவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தில் உரையாற்றுவார் என்று கூறப்பட் டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன், சீன அதிபரின் மனைவி பெங் லியான், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நான்கு மாகாணங் களில் ஆளுநர்கள், முதல்வர்கள், ராணுவத் தளபதிகள், தூதுவர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT