Last Updated : 11 Apr, 2015 02:37 PM

 

Published : 11 Apr 2015 02:37 PM
Last Updated : 11 Apr 2015 02:37 PM

ஒபாமா - ராவுல் காஸ்ட்ரோ சந்திப்பு: அமெரிக்கா - கியூபா வரலாற்றுப் பகைக்கு முடிவு?

அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே ஆன 50 ஆண்டுகள் பகைக்கு முடிவு கட்டப்பட்டதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கியூபா அதிபரும், ஃபிடல் காஸ்ரோவின் சகோதரருமான ராவுல் காஸ்ட்ரொவை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்தார்.

பனாமா நாட்டில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் நடந்த சந்திப்புக்கு பின்னர், இரவு விருந்தை இரண்டு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் லத்தின் அமெரிக்க அதிகாரிகள் இருந்தனர்.

உணவு நேரத்துக்கு பின்னர் பத்திரிகையாளரிடம் பேசிய ஒபாமா, "இரு நாடுகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்துள்ளன. இரண்டு நாடுகளையும் ஆட்சி செய்த தலைவர்களுக்கு பல வகையிலான கருத்து வேறுபாடுகள் நிலவியது. ஆனால் அவை அனைத்துமே கடந்து சென்ற காலம்" என்றார்.

கியூபாவும் அமெரிக்காவும் எதிரி நாடாக இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கு சுமார் 50 ஆண்டுகள் கால பகை உள்ளது. இந்த நிலையில் இவர்களது சந்திப்பு அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இவர்களது சந்திப்பு இருத் தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க வெளியுறுவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, கியூபா தேசிய பாதுகாப்பு செயலர் பென் ரோட்ஸும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதனை அடுத்து ஒபாமாவும் ராவுல் கேஸ்ட்ரோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவரின் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

1959 ஆம் ஆண்டு அப்போதைய கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவும் அமெரிக்க துணை அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சனும் சந்தித்து பேசினர். அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இப்போது சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x