Published : 16 Apr 2015 12:52 PM
Last Updated : 16 Apr 2015 12:52 PM
போப் பிரான்சிஸ் பயன்படுத்திய ஆப்பிள் ஐ-பேட் ஏலத்தில் உருகுவேயில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் கிடைத்த ஏலத் தொகை உருகுவேவில் உள்ள ஏழைக் குழந்தைகளின் படிப்புக்குச் செலவிடப்பட உள்ளது.
வாட்டிகன் சென்றிருந்த உருகுவே பாதிரியார் கோன்சலோ அமேலியஸுக்கு தனது பெயர் பொறிக்கப்பட்ட ஐ-பேடை போப் பிரான்சிஸ் பரிசாக வழங்கியிருந்தார். அதனை தற்போது உருகுவே அரசு ஏலத்தில் விட்டது.
போப்பின் ஐ-பேட் சுமார் 40 ஆயிரம் டாலருக்கு விலைபோனது. இந்தத் தொகை முழுவதையும் ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு செலவிடப்பட உள்ளது.
ஐ-பேடை ஏலத்தில் எடுத்தவரின் பெயரை உருகுவே வெளியிட மறுத்துள்ளது.
போப் பிரான்சிஸ், ஐ-பேடை வாங்கிய புதிதில், அந்த ஐ-பேடை பயன்படுத்தியே பல ட்வீட்களை போப் வெளியிட்டு வந்தார். அதேவேளையில் தொழில்நுட்பம் பல்வேறு சங்கடங்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT