Published : 03 Mar 2015 11:20 AM
Last Updated : 03 Mar 2015 11:20 AM
ஹாங்காங்கில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி கடந்த சில மாதங்களாக மாணவர் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. ஆனால் சீன அரசின் கடும் அடக்குமுறையால் அந்தப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.
இந்நிலையில், சீனாவிலிருந்து ஹாங்காங்குக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதை கண்டித்து ஹாங் காங்கின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நேற்று போராட் டத்தில் ஈடுபட்டனர். யோன் லொங் சந்தைப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
ஹாங்காங்கில் சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியமர்த்தப் பட்டு வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்தப் பிரச்சினை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT