Published : 19 Mar 2015 11:35 AM
Last Updated : 19 Mar 2015 11:35 AM
ஸ்வீடனின் 2-வது பெரிய நகரமான கோடீபெர்கில் மர்ம நபர்கள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். இருவர் பலியாகினர்.
ஸ்வீடனின் தென் - கிழக்கில் உள்ள கோடீபெர்க் நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் புதன்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய சரமாரி தாக்குதலில் பலர் சிக்கினர். இதில் இருவர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்தச் சம்பவத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணி தெரியவரவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த பகுதியில் ஏற்கெனவே கும்பல்களால் தாக்குதல் ஏற்பட்டது என்பதால் உள்ளூர் வன்முறை கும்பல்களிடம் விசாரணை நடக்கிறது. இந்தத் தாக்குதல் தீவிரவாத சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், இருப்பினும் இது குறித்து தெளிவாக தற்போது முடிவு செய்ய முடியவில்லை என்றும் கோடீபெர்க் போலீஸார் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT