Published : 11 May 2014 12:36 PM
Last Updated : 11 May 2014 12:36 PM

நைஜீரிய சிறுமிகள் கடத்தல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை: களமிறங்கியது அமெரிக்க ராணுவம்

பள்ளிச் சிறுமிகளைக் கடத்திய நைஜீரிய ‘போகோ ஹராம்' தீவிரவாதிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளி யில் இருந்து 276 சிறுமிகள் கடத்தப் பட்டனர். தவிர, மே 5-ம் தேதி எட்டு சிறுமிகள் வராபே நகரத்தில் இருந்து ‘போகோ ஹராம்' தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கடத்தலைக் கண்டித்து சமீபத்தில் ஐ.நா.பாதுகாப்பு கவுன் சில் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத் தில், தீவிரவாதிகளின் பிடிக்குள் இருக்கும் அனைத்துச் சிறுமி களையும் எந்த ஒரு நிபந்தனையு மின்றி விடுவிக்கவும், அந்தச் சிறுமிகளை அடிமைகளாக விற்கப்போவதாகக் கூறிய ‘போகோ ஹராம்' அமைப்பின் தலைவனின் பேச்சைக் கண்டித்தும் விவாதங்கள் நடந்தன. விரைவில் அந்தத் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

களத்தில் அமெரிக்க ராணுவம்

கடத்தப்பட்ட நைஜீரியப் பள்ளிச் சிறுமிகளை மீட்பதற்கு அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.

“இது ஒரு சவாலான விஷயம். குழந்தைகள் கடத்தப்பட்டு 25 நாட்கள் ஆகின்றன. எவ்வளவு விரைவாக அவர்களை மீட்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதே எந்த ஒரு முன் முடிவையும் எங்களால் சொல்ல முடியாது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்று நைஜீரியத் தலைநகரான அபுஜாவில் வந்திறங்கியது. இவர்களில் ஏழு பேர் அமெரிக்க ஆப்பிரிக்க படை களைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். சனிக்கிழமை இன்னும் ஏழு பேர் கொண்ட குழு நைஜீரியாவில் களமிறங்க உள்ளது.

இவர்கள் துப்பறிதல், ராணுவ நடவடிக்கைகள், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை போன்ற எல்லா தளங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக நைஜீரிய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு உதவ இருக்கிறார்கள். -பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x