Published : 26 Mar 2015 12:56 PM
Last Updated : 26 Mar 2015 12:56 PM
ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மன் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து உபயோகமான தகவல்கள் கிடைத்ததாகவும் அவை பயன் தரும் என்றும் பிரான்ஸ் விமான போக்குவரத்து புலனாய்வு கழகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விமானத்தின் சிதறல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. விமானத்திலிருந்த 144 பயணிகளும் 6 பேர் கொண்ட விமான குழுவினரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உடல்களை மீட்பதில் சிரமமான நிலையே நீடிக்கிறது.
144 பயணிகளில் 72 பேர் ஜெர்மனை சேர்ந்தவர்கள் என ஜெர்மன்விங்ஸ் தெரிவித்துள்ளது. இவர்களைத் தவிர விமானத்தில் ஜப்பான், துருக்கி, டென்மார்க், மெக்சிகோ, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த தேடலில், விமானி அறையில் பதிவான குரல் பதிவு கொண்ட ஆடியோ ரெக்கார்டர் மற்றும் கருப்பு பெட்டி கிடைத்தது தேடலில் நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் விமான போக்குவரத்து புலனாய்வு கழக தலைவர் ரெமி ஜவுதி கூறும்போது, "விமானி அறையில் பதிவான குரல் பதிவுகள் நம்பகமான தகவல்களை நமக்கு அளிக்கும். ஆனால் உடனடியாக இதிலிருந்து எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது.
முழுமையான விவரங்கள் கிடைக்க சில வாரங்கள் அல்லது மாதங்களும் ஆகலாம். விமான போக்குவரத்து அதிகாரியிடம் பைலட் இறுதியாக தொடர்புகொண்டு பேசியது மட்டும் உறுதியாக உள்ளது" என்றார்.
பைலட் சிக்கி கொண்டாரா?
இதனிடையே விமானி அறையிலிருந்து வெளியே சென்ற பைலட் மீண்டும் உள்ளே நுழைய முடியாமல் போனதாக "நியூ யார்க் டைம்ஸ்" செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானி அறையில் பதிவான குரல் பதிவில், திறக்க முடியாமல் போன விமானி அறையின் கதைவை தட்டும் சப்தம் பதிவானதாக பெயர் குறிப்பிடாத மற்றொரு விமான போக்குவரத்து புலனாய்வு கழகத்தை சேர்ந்த அதிகாரி கூறியதாக "நியூ யார்க் டைம்ஸ்" குறிப்பிட்டுள்ளது.
இவர்களைத் தவிர விமானத்தில் ஜப்பான், துருக்கி, டென்மார்க், மெக்சிகோ, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
விமானத்தில் சென்றவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த மோசமான விபத்து ஜெர்மன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT