Published : 17 Mar 2015 10:45 AM
Last Updated : 17 Mar 2015 10:45 AM
தனக்குப் பரிசு தராமல் ஏமாற்றிய கணவரை, அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய பெண் ஒருவர் முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் ஜப்பானில் நடந்துள்ளது.
உலகம் முழுக்க பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஜப்பானில் அந்நாட்டுப் பெண்கள் தங்களின் கணவர், நண்பர்கள், குழந்தைகள், உயரதிகாரிகள் போன்றோருக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம்.
இதற்குப் பிரதிபலனாக, மார்ச் 14-ம் தேதி அந்நாட்டில் `வெள்ளை தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களோடு பயணிக்கும் பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் தந்து மகிழ்வர்.
கடந்த 14-ம் தேதி அங்கு `வெள்ளை தினம்' கடைப் பிடிக்கப்பட்டது. அந்த நாளில் தனக் குப் பரிசுப் பொருள் தராமல் ஏமாற் றிய 31வயது கணவரை, கழுத்தில் கட்டும் `டை'யைப் பயன்படுத்தி, அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய மி நிஷியாமா என்பவர் முயன்றுள் ளார்.
அதிர்ஷ்டவசமாக, அவரின் கணவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து சகாய் எனும் நகரில் உள்ள தன் வீட்டில், மி நிஷியாமா கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT