Published : 17 Mar 2015 10:35 AM
Last Updated : 17 Mar 2015 10:35 AM
துபாய் நாகரத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு, நியூயார்க், லண்டன் ஆகிய நகரங்களைக் காட்டிலும் ஒரு தனி நபரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
தற்போது அந்நகரத்தில் சுமார் 24 லட்ச மக்கள்தொகைக்கு 14 லட்சம் வாகனங்கள் இருக் கின்றன. அதாவது ஒவ்வொரு 1,000 பேருக்கு 540 வாகனங்கள் என்ற வீதம் துபாயில் வாகன எண்ணிக்கை உள்ளதாக, அந் நகர சாலை மற்றும் போக்கு வரத்து ஆணையம் தெரிவித் துள்ளது.
இந்த எண்ணிக்கை நியூயார்க் கில் 1,000 பேருக்கு 305 வாகனங்கள் என்பதாகவும், லண்டனில் 1,000 பேருக்கு 213 வாகனங்கள் என்பதாகவும் உள்ளது.
பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க சமீபகாலமாக துபாயில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த 2009-ம் ஆண்டு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு ட்ராம் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு கார்கள்தான் கோலோச்சி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT