Published : 13 Mar 2015 12:53 PM
Last Updated : 13 Mar 2015 12:53 PM
ஆப்கான் தலைவர்கள் இணைந்து புதிய ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஆப்கான் செல்ல உள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
ஆப்கான் அதிபர் அஸ்ரப் கனி மற்றும் அப்துல்லா அப்துலாவுடன் காணொலியில் தொடர்புகொண்டு பேசிய அதிபர் ஒபாமா, "ஆப்கானில் புதிய ஆட்சி மிகவும் திறம்பட அமைந்திட வேண்டும். ஒருங்கிணைந்த செயல்பாடுகளோடு மக்களின் நலனில் அக்கறை செலுத்தம் விதத்தில் ஆட்சியை விரைவில் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
அதேப் போல ஆப்கான் தலைவர்கள் அமெரிக்கா வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT