Published : 28 Mar 2015 04:29 PM
Last Updated : 28 Mar 2015 04:29 PM
ஜெர்மன் விமானத்தை தகர்த்திருக்கலாம் என்று கூறப்படும் துணை விமானியின் மனநலம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை லுஃப்தான்ஸா விமான நிறுவனம் மறுத்துள்ளது.
ஜெர்மனிவிங்ஸ் ஏர்பஸ் ஏ320 ரக விமானம், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் செவ்வாய்க்கிழமை விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பயணிகள் 150 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நேரிய துணை விமானியே காரணம் என்றும் அதற்கான ஆதாரங்கள் கருப்புப் பெட்டியிலும் விமானி அறை ஆடியோ பதிவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சந்தேக துணை விமானியின் வீட்டில் ஜெர்மன் போலீஸார் நடத்திய சோதனையில் 'முக்கிய ஆவணங்கள்' சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த ஆவணங்களில், துணை விமானி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதனை ஜெர்மன்விங்ஸ் நிர்வகிக்கும் லுஃப்தான்ஸா விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல் குறித்து லுஃப்தான்ஸா எதையும் தெரிவிக்க முடியாது. அதற்கான போதிய விவரங்கள் இல்லாத நிலையில் இதனை எங்களால் உறுதி செய்ய முடியாது.
அவரை பணியில் அமர்த்தியபோது, மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பரிசோதனைகளையும் நிறுவனம் மேற்கொண்டது.
மேலும், விமானிகளின் மனநிலை ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசிக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT