Published : 19 Mar 2015 01:27 PM
Last Updated : 19 Mar 2015 01:27 PM
அரிசி கொள்முதலில் ஊழல் நடந்ததாக தாய்லாந்து முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (46) மீது தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
தாய்லாந்து உச்ச நீதிமன்றத்தின் குற்றவியல் பிரிவு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணை மே மாதம் 19-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசின் அரிசி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (46) மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அந்நாட்டுச் சட்டபடி அவர் 5 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என்பது சட்ட நிபுணர்கள் கருத்தாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT