Published : 21 Feb 2015 12:21 PM
Last Updated : 21 Feb 2015 12:21 PM
துபாயில் உள்ள சுமார் 1,082 அடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துபாயின் மெரினா மாவட்டத்தில் உள்ள உலகின் மிகப் உயரிய அடுக்குமாடி குடியிருப்புகளுள் ஒன்றான 79 அடுக்குமாடி கட்டடத்தில் இந்திய நேரப்படி காலை 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் 50-வது தளத்தில் புகை கிளம்பியதாக 'தி கல்ஃப் நியூஸ் டெய்லி' செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பல்வேறு முனைகளிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்தும் முயற்சி பல மணி நேரம் நீடித்தது. உடனடியாக அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கட்டடத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியாத நிலையில் உள்ளது.
இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT