Published : 24 Feb 2015 10:28 AM
Last Updated : 24 Feb 2015 10:28 AM
இரவில் நெடுநேரம் கழித்து சாப்பிடுவதால் மூளை பாதிப்படையும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியர் கிறிஸ்டோபர் கால்வெல் இந்த ஆய்வு குறித்து கூறியதாவது:
இரவில் நெடுநேரம் கழித்து உண்பது, அதிலும் உடல் தூங்க நினைக்கிற நேரத்தில், நாம் சாப்பிட்டால் அது நமது கற்றல் மற்றும் நினைவுத்திறனை வெகுவாகப் பாதிப்படையச் செய்யும்.
நமது உடல், நீண்ட நேரம் வேலை செய்யும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன் கொண்டதல்ல. எனவே காலம் கடந்து சாப்பிடுவது நமக்கு ஆரோக்கிய குறைவையே ஏற்படுத்தும்.
நமது உடலுக்கென்று தனியாக ஓர் உயிரியல் கடிகாரம் சுழன்று கொண்டிருக்கிறது. அதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போவது முதல் `டைப் 2' வகை நீரிழிவு நோய் வரை நம்மைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த பாதிப்புகள் பின்னிரவில் உண்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. `ஷிப்ட்' முறையில் பணியாற்றுபவர்களுக்கும் ஏற்படும்.
இந்த ஆய்வு எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில், தூங்கும் நேரத்தில் சாப்பிடும் பழக்கம் கொண்ட எலிகள், அதிக ஞாபக மறதியைக் கொண்டிருந்தன. மேலும், புதிய பொருட்களை அடை யாளம் காண்பதிலும் அவற்றுக்குச் சிக்கல்கள் இருந்தன.
இந்த ஆய்வு எலிகளிடையே மேற்கொள்ளப்பட்டி ருந்தாலும் இதன் முடிவுகள் மனிதர் களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT