Published : 18 Feb 2015 11:11 AM
Last Updated : 18 Feb 2015 11:11 AM
ஜப்பானில் நேற்று காலை கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடியாகத் தகவல் ஏதும் இல்லாத நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 8.06 மணி அளவில் பசிபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுமார் 210 கிமீ தூரத்துக்கு மியாக்கோ எனும் பகுதி வரை உணரப்பட்டது. சுமார் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, இவாடே கடற்கரையோரம் அமைந்துள்ள குஜி பகுதியில் சுமார் 8 அங்குலத்துக்கு அலைகள் எழும்பின. அந்தக் கரையின் மற்ற இடங்களில் 4 அங்குலத்துக்கு அலைகள் எழும்பின. இதனை சிறிய அளவிலான சுனாமி என்று ஜப்பான் வானிலை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதே இடத்தில் தான் கடந்த 2011ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறிய அளவிலான சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாகத் தகவல் கள் இல்லை.
எனினும், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோரம் உள்ள வசிப்பிடங்களில் வசித்து வரும் சுமார் 19 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT