Published : 10 Apr 2014 10:29 AM
Last Updated : 10 Apr 2014 10:29 AM

அண்டார்டிகாவில் ஜப்பானின் திமிங்கில வேட்டை முடிவுக்கு வந்தது: கடந்த 3 மாதங்களில் 251 திமிங்கிலங்களைக் கொன்றுள்ளது ஜப்பான்

அண்டார்டிக் பகுதியில் ஜப்பான் திமிங்கில வேட்டையில் ஈடுபடுவதற்கு, தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களில் 251 திமிங்கிலங்களைக் கொன்றொழித்த ஜப்பானின் திமிங்கில வேட்டை புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

கடந்த 25 ஆண்டுகளாக, ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்ற பெயரில் அண்டார் டிக், வடமேற்கு பசிபிக் கடல் பகுதிகளில் ஜப்பான் திமிங்கில வேட்டையில் ஈடு பட்டு வந்தது. ஆனால், அந்த வேட்டை யில் கொல்லப்படும் பெரும்பாலான திமிங்கிலங்கள் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, பெரிய உணவு விடுதிகளில் உண வாகப் பரிமாறப்படுகின்றன.

இந்த வருடம் ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த வேட்டை யில் 251 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுள் ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டில் 103 திமிங்கிலங்கள் கொல்லப் பட்டன.

`சர்வதேச திமிங்கில வேட்டை ஆணை யக'த்தில் உறுப்பினராக இருக்கும் ஜப்பான், தன்னுடைய இந்தத் திமிங்கில வேட்டை அறிவியல் ஆய்வுகளுக்காக நடத்தப்பட்டாலும், ஒரு பகுதி உணவுக்கா கவும் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆணையகத்தின் கீழ், ஜப்பானிய மீனவர்கள் தங்கள் வாழ் வாதாரத்துக்காக குறைந்த அளவில் திமிங்கில வேட்டையை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜப்பானின் இந்தத் திமிங்கில வேட்டையைப் பல நாடுகளும் எதிர்த்து வந்தன. எனவே, நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம், அண்டார்டிக் பகுதியில் திமிங்கில வேட்டையில் ஈடுபட ஜப்பானுக்குக் கடந்த வாரம் தடை விதித்தது. இத னால் சுமார் 25 ஆண்டுகளாக அண்டார்டிக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த திமிங்கில வேட்டையை முதன்முதலாக நிறுத்தியிருக்கிறது ஜப்பான்.

எனினும், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வடமேற்கு பசிபிக் பகுதியில் ஜப்பான் மேற்கொண்டிருக்கும் திமிங்கல வேட்டையை எவ்வகையிலும் பாதிக்காது. அங்கு கடலிலும், கரையோரத்திலும் கோடைக் காலம் தொடங்கி குளிர் காலம் வரை திமிங்கில வேட்டை நடைபெறும். கடந்த ஆண்டு 58 திமிங்கிலங்கள் கடலிலும், 132 திமிங்கிலங்கள் கரையோரத்திலும் வேட்டையாடப் பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x