Last Updated : 20 Feb, 2015 01:15 PM

 

Published : 20 Feb 2015 01:15 PM
Last Updated : 20 Feb 2015 01:15 PM

சோனி ஹேக்கிங் பின்னணியில் வட கொரியா: அமெரிக்க புலனாய்வுத் துறை

சமீபத்தில் சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டதுக்கு வட கொரியாதான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டதாக, அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியாவில் உள்ள சோனி பிக்ச்சர்ஸ் என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, ஊடுருவலுக்கு உதவிய மென்பொருளை ஆய்வு செய்ததில் இது நிரூபணமானது என அமெரிக்க புலனாய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கனடிய பாதுகாப்பு அமைச்சக சந்திப்பின்போது அமெரிக்க புலனாய்வுத் துறையின் இயக்குனர் மைக்கல் ரோஜர் கூறும்போது, "சோனி ஹேக்கிங்குக்கு காரணமான சைபர் கொள்ளையர்கள் குறித்த ஆழமான விவரங்கள் கிடைத்துள்ளன. வட கொரியாவிலிருந்து ஊடுருவ மால்வேர் நுழைக்கப்பட்டதிலிருந்து கலிஃபோர்னியா சோனி அலுவலகத்தில் அத்துமீறல் நடந்ததுவரையான அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தின் இடைவெளிகளில் 4 முறை ஹேக்கர்கள் கமாண்டுகளை அனுப்பியுள்ளனர்" என்றார்.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்த 'தி இன்டெர்வியூ' திரைப்படம் வெளியாக இருந்த நேரத்தில் அதனை வெளியிட இருந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சுமார் 3,000 கம்ப்யூட்டர்கள் ஹேக்கர்களால் அத்துமீறப்பட்டு பல புதிய படங்களின் கோப்புக்கள் திருடப்பட்டு ரிலீஸுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இதனால் சோனி நிறுவனத்துக்கு பெறும் இழப்பு ஏற்பட்டது.

தயாரிப்பு நிலையில் இருந்த பாப் பாடல்கள் கசியவிடப்பட்டதோடு சோனி நிறுவனத்துக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

வட கொரிய அதிபரை சித்தரித்த 'தி இன்டெர்வியூ' திரைப்படத்தை முடக்கவே வட கொரிய ஹேக்கர்கள் இதில் ஈடுப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த அத்துமீறல் சோனி மீதான தாக்குதலாக மட்டுமல்லாமல் அமெரிக்கா - வட கொரியா இடையேயான சைபர் போர் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டது நினைவுக்கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x