Last Updated : 21 Feb, 2015 10:46 AM

 

Published : 21 Feb 2015 10:46 AM
Last Updated : 21 Feb 2015 10:46 AM

ஆஸ்திரேலியாவை மிரட்டிய இரட்டை சூறாவளி

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியை நேற்று இரட்டை சூறாவளி தாக்கியது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

சூறாவளியால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக் கணக்கானோர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சில மணி நேர இடைவேளையில் அடுத்தடுத்து இருமுறை சூறாவளி தாக்கியது.

அப்போது 285 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஒரு பகுதி புயலால் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டதால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அரசுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்று வரும் நிலையில் சூறாவளி ஏற்பட் டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

ஏனெனில் போட்டி நடை பெறும் இடங்களில் ஒன்றான பிரிஸ்பென் நகரிலும் சூறாவளி லேசாக எட்டிப்பார்த்தது. ஆஸ்தி ரேலியாவின் வடகிழக்கு கடல் எல்லைதான் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதால் கிரிக்கெட் போட்டி களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x