Published : 28 Feb 2015 09:13 AM
Last Updated : 28 Feb 2015 09:13 AM
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திருடப்பட்ட பிகாசோவின் ஓவியம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல கோடி மதிப்புள்ளதாகும்.
1911-ம் ஆண்டில் பிகாசோ வரைந்த ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந் தது. கடந்த 2001-ம் ஆண்டில் அந்த ஓவியம் திருடப்பட்டது. பிரான்ஸ் போலீஸாரால் ஓவியத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடந்த டிசம்பரில் பெல்ஜியம் நாட்டில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சலை அமெரிக்க குடியுரிமை அதி காரிகள் சோதனை நடத்தியபோது, அது பிகாசோவின் ஓவியம் என்பதும் பாரீஸில் இருந்து திருடப் பட்டது என்பதும் தெரியவந்தது.
பெல்ஜியத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அந்த ஓவியம் கடத்தி வரப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இந்த கடத்தலில் தொடர் புடையவர்கள் குறித்து அமெரிக்க போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT