Published : 30 Jan 2015 06:05 PM
Last Updated : 30 Jan 2015 06:05 PM
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஷியா பிரிவு மக்கள் வழிபாடு நடத்தும் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 33 பேர் பலியாகியதாகவும் 55-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஷிக்காப்பூரில் உள்ள இமாம்பர்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தது 33 பேர் பலியாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷியாப் பிரிவு மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டுவெடித்ததில் மசூதியின் தளம் இடிந்துவிழுந்ததாக எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பலியானவர்களின் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் உறவுகளுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்த சம்பவம் தொடர்பான உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT