Last Updated : 16 Jan, 2015 12:29 PM

 

Published : 16 Jan 2015 12:29 PM
Last Updated : 16 Jan 2015 12:29 PM

சார்லி ஹெப்டோ தாக்குதலை போப் ஆண்டவர் நியாயப்படுத்தவில்லை: வாடிகன் விளக்கம்

பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதலை போப் ஆண்டவர் நியாயப்படுத்திப் பேசவில்லை என்று வாடிகன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பாரீஸில் செயல்படும் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7-ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் பத்திரிகையின் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பிரான்ஸில் தொடர்ந்து 3 நாட்கள் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்தன.

தாக்குதலுக்கு உள்ளான சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கு பின்னான தமது முதல் பதிப்பில் நபிகள் நாயகத்தின் கருத்து சித்திரித்தை வெளியிட்டது. இது தொடர்பாக பல்வேறு மாறுபட்ட கருத்துக்களும் எழுந்தன.

இதனிடையே (நேற்று) வியாழனன்று பிலிப்பைன்ஸ் சென்றிருந்து போப் ஆண்டவர், "சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. ஆனால் சமூகத்தை பாதிக்காத நிலையில் அவை வெளிப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரத்துக்கும் சில எல்லைகளும் உள்ளது. யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தும், கெலி செய்யும் வகையில் கருத்துச் சுதந்திரம் இருக்கக்கூடாது" என்றார்.

போப் ஆண்டவரின் இந்த கருத்து, பாரீஸ் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில் வாடிகன் நகரின் பத்திரிகை அலுவலகம் இது குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், "சார்லி ஹெப்டோ தாக்குதலை போப் ஆண்டவர் எவ்விதத்திலும் நியாயப்படுத்தவில்லை. அவரது வார்த்தைகளில் வன்முறையை தூண்டும் எந்த நோக்கமும் இருக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x