Last Updated : 12 Jan, 2015 07:13 PM

 

Published : 12 Jan 2015 07:13 PM
Last Updated : 12 Jan 2015 07:13 PM

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகளுக்கு நாளை மரண தண்டனை

பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத் மற்றும் சுக்கூர் சிறைகளில் நாளை 5 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேருக்கு சுக்கூர் சிறையிலும், மேலும் 2 பேருக்கு பைசலாபாத் சிறையிலும் நாளை தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது, என்று தி நியூஸ் இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

சுக்கூர் சிறையில் உள்ள முகமது ஷாகித் ஹனீப், முகமது தால்ஹா, மற்றும் கலீல் அகமது ஆகியோர் 2001-ஆம் ஆண்டு ராணுவ அமைச்சக இயக்குநர் ஜஃபர் ஹுசைன் ஷா என்பவரை கொலை செய்ததாக தூக்கு தண்டனை அளிக்கப்பட்டவர்கள். நாளை காலை 6.30 மணிக்கு இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

பைசலாபாத் சிறையில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளான நவாசிஷ் அலி மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோர் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொலை செய்ய சதி செய்தாக குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களும் நாளை காலை தூக்கில்டப்படுவார்கள் என்று தெரிகிறது.

மரண தண்டனையை மீண்டும் கொண்டு வந்த பிறகு பாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் இதுவரை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x