Published : 03 Jan 2015 05:47 PM
Last Updated : 03 Jan 2015 05:47 PM
காதல் செய்ய வேண்டும் என்பதையே இந்த ஆண்டின் முக்கிய லட்சியமாக பெரும்பாலான இளைஞர்கள் கொண்டுள்ளனர் என்று இணையதள ஆய்வுத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கச்சிதமான உடம்பையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அடைவதுதான் எங்களது புத்தாண்டு சபதம் என 2013-ல் இணையதளங்கள் வழியாக நடந்த ஆய்வில் பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 2015 புத்தாண்டில் இளைஞர்களின் முக்கிய சபதம் என்ன? என்பது குறித்து கியூபிட் என்ற வலைதளம் நடத்திய ஆய்வொன்றில் கேட்கப்பட்டது.
இந்த ஆய்வில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் புத்தாண்டில் காதல் செய்ய வேண்டும் என்பதனையே தங்களது முக்கிய சபதமாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவை அமெரிக்காவைச் சேர்ந்த ஃபீமேல்ஃபர்ஸ்ட் (femalefirst.co.uk.) என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது.
இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் என 1,000 பேரை தேர்வு செய்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 57 சதவீதத்தினர் காதலில் விழுவதே இந்த ஆண்டின் முக்கிய சபதம் என தெரிவித்துள்ளனர்.
39 சதவிகித மக்கள் அதிகமாய் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், 64 சதவிகிதம் பேர் வாழ்க்கையை அதிகமாய் அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆச்சரியமாய் 11 சதவீத ஆண்கள் வாழ்க்கையில் முன்னேறி, திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையைத் தொடங்க எண்ணியிருக்கின்றனர்.
தன் துணையைத் தேடுவதில் பெண்களைவிட ஆண்கள் அதிக உயிர்ப்பாய் இருக்கின்றனர் என்கிறது ஆய்வு. அதிகபட்ச ஆண்கள், வழக்கமான பெண்களைத் தாண்டி வெளியில் வந்து திருமணம் செய்ய ஆசைப்பட, 6 சதவீத ஆண்கள் பிரபலங்களை மணக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
சேமிப்பைப் பொறுத்தமட்டில் இருபாலரும் சம்பாதித்து, அடுத்த இடத்தை நோக்கி முன்னேற ஆசைப்படுகின்றனர். 32 சதவீத பெண்கள், தங்கள் ஓய்வு நேரத்தை அவர்களுக்காகவே செலவிட விருப்பப்பட, 17 சதவீத ஆண்கள் பொது சேவைகளில் ஈடுபட ஆர்வமாய் இருப்பதாய்த் தெரிவித்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT