Last Updated : 13 Dec, 2014 11:53 AM

 

Published : 13 Dec 2014 11:53 AM
Last Updated : 13 Dec 2014 11:53 AM

பொழுதுபோக்குக்காக 41 கொலைகள்: பிரேசிலில் சைக்கோ இளைஞர் கைது

பிரேசிலில் பொழுதுபோக்குக்காக 41 பேரைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீ ஸார் கைது செய்துள்ளனர். அந்த கொலைகாரனுக்கு வயது 26.

பிரேசிலில் வசித்து வருபவன் சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ். இவன் ஒரு சைக்கோ. இவன் ரியோ நகரத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி யில் ஒரு பெண்ணைக் கொலை செய்தான். அதைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்தனர். அவர்களின் விசாரணை யின்போது, தான் இதுவரை 41 பேரை ஜாலிக்காகக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளான்.

அவர்களில் 37 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குவர். இவ‌ன் கொலை செய்த பெண்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை அழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் அதைக் கொலை செய்தேன் என்று விசாரணையில் க்ரசாஸ் கூறியுள்ளான். போலீஸாரின் விசாரணையில் அவன் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து வந்தேன். என்னுடைய 17 வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணைக் கொலை செய்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதனால் தொடர்ந்து பெண்களைக் கொலை செய்ய ஆரம்பித்தேன்.

கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எங்கே வசிக்கிறார்கள், குடும்பம் எப்படிப்பட்டது போன்ற விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்வேன். இதற்கு ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ ஆகும். பின்னர் ஒரு நாள் அதிகாலையில் அவர்களின் வீட்டுக்குச் செல்வேன். சரியான நேரம் பார்த்து கொன்று விடுவேன்.

என்னை ஒரு தம்பதி அடியாளாக நியமித்தனர். அவர்கள் தரும் காசுக்காகச் சில கொலைகளைச் செய்து வந்தேன். அப்போது மட்டும் நான் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி கழுத்தை நெரித்து கொலை செய்வேன்.

கொலை செய்யாதபோது நான் மிகவும் கஷ்டப்படுவேன். கொலை செய்வது எனக்கு நிம்மதியைத் தரும். நான் ஒருவரைக் கொன்ற பிறகு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன். பிறகு அடுத்த கொலைக்குத் தயாராகி விடுவேன்.

என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்" என்று கூறியுள்ளான்.

பிரேசிலில் கொலைக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை 30 ஆண்டு சிறை. அங்கு மரண தண்டனை இல்லை. என்னுடைய செயலுக்காக வருந்தவில்லை. எனக்கு 10, 15 அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தாலும், விடுதலையான பிறகு மீண்டும் கொலை செய்வேன்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x