Last Updated : 20 Dec, 2014 12:34 PM

 

Published : 20 Dec 2014 12:34 PM
Last Updated : 20 Dec 2014 12:34 PM

பாகிஸ்தான் பள்ளிகளில் தாக்குதல் தொடரும்: பெஷாவர் தாக்குதலை திட்டமிட்ட தீவிரவாதி வீடியோ மூலம் மிரட்டல்

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் கடந்த வாரம் ராணுவ பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தலிபான் தீவிரவாதி உமர் மன்சூர் என்பது தெரியவந்துள்ளது.

தனது கொடூரச் செயலால் பாகிஸ் தானில் மிகவும் வெறுக்கப்படும் மனிதராக உருவெடுத்துள்ள மன்சூருக்கு வயது 36. அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அவரது பேச்சு அடங்கிய வீடியோவை தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத் தினர் இணையதளத்தில் வெளி யிட்டுள்ளனர். அதில் நீளமான தாடி யுடன், விலை உயர்ந்த உடை அணிந்து காணப்படும் மன்சூர், பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தி பேசி யுள்ளான். பெஷாவரில் நடைபெற்றது போல பாகிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என்று மிரட்டல் விடுத்துள் ளா்ர்.

வீடியோ பதிவில் அவன் கூறியுள்ள தாவது: பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் எங்கள் பெண்களும், குழந்தைகளும் வீர மரணமடைந்தனர். எனவே உங்கள் குழந்தைகள் எங்களிடம் இருந்து தப்ப முடியாது. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் இதுபோன்ற பாணியில்தான் பதிலடி கொடுப்போம் என்று மன்சூர் கூறியுள்ளார்.

உமர் மன்சூர் குறித்து பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமா பாத்தில் பள்ளிப் படிப்பை தொடங்கிய மன்சூர் பிறகு மதரஸா எனப்படும் மதப்பள்ளியில் படித்ததன் மூலம் தீவிர மதப்பற்றாளனாக மாறினார்.

2007-ம் ஆண்டு பிற்பகுதியில் தலிபான் இயக்கத்தில் இணைந்து, இப்போது அதன் முக்கிய கமாண்டர்களில் ஒருவராக உள்ளார். அவருக்கு இரு பெண் குழந்தை களும், ஒரு மகனும் உள்ளனர். அவரை பஸ்தூன் மொழியில் நேரி என்று அழைக்கின்றனர். இதற்கு ஒல்லி யானவர் என்று பெயர்.

உமர் மன்சூர் தோன்றும் வீடியோவில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தாக்குதல் நடத்தப் பட்ட 7 மணி நேரத்தின் தொகுப்பும், தாக்குதல் தொடர்பாக அவர் தீவிரவாதிகளுக்கு அளித்த உத்தர வுகளும் ஆங்கில மொழி பெயர்ப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x