Published : 14 Dec 2014 02:44 PM
Last Updated : 14 Dec 2014 02:44 PM
பணியாளரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்ட தென் கொரிய விமான நிறுவன உரிமையாளரின் மகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து பொதுமக்கள் முன்னிலையில் அவர் தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து தென்கொரியாவின் இஞ்சியோன் நகருக்கு கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அந்த விமானம் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.
கொரியன் ஏர்லைன்ஸ் அதிபர் சோ யாங்-கூவின் மகள் சோ ஹூன் ஆவும் விமானத்தில் இருந்தார். அப்போது விமான பணிப்பெண் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கினார். அதை கவனித்த சோ ஹூன் ஆ, தட்டில் ஸ்நாக்ஸ் வகைகளை வழங்காதது ஏன் என்று கடிந்து கொண்டார்.
இதுதொடர்பாக உணவு வகைகளைப் பரிமாறும் பிரிவின் தலைவரை அழைத்து உடனடி யாக விமானத்தை விட்டு கீழே இறக்கிவிட்டார். இந்தப் பிரச்சினை யால் சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டது.
சோ ஹூன் ஆவின் நடவடிக் கைக்கு அமெரிக்கா மற்றும் தென் கொரிய விமான பயணிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக் கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தென் கொரிய விமான நிறுவனம் முதலாளியின் மகள் மீது தவறு இருப்பதை உறுதி செய்தது. விமான நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதையடுத்து சோ ஹூன் ஆ பத்திரிகையாளர்கள் முன்னிலை யில் பொதுமக்களிடமும், விமான பயணிகளிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தன்னால் விமானத்தில் இருந்து இறக்கிவிட பணியாளரை நேரில் சந்தித்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விமான நிறுவனத் தலைவரும், சோ ஹூன் ஆவின் தந்தையுமான சோ யாங் ஹுவும் பத்திரிகையாளர் கள் முன்னிலையில் தனது மகளின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT