Published : 17 Dec 2014 11:29 AM
Last Updated : 17 Dec 2014 11:29 AM
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற தீவிர வாத தாக்குதல்கள் குறித்த விவரம் வருமாறு:
2014 நவம்பர் 2:
வாகா எல்லையில் தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர்.
2014 ஜூன் 9:
பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் 13 பேரை சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
2014 ஜூன் 8:
ஈரானுக்கு புனித பயணத்தை நிறைவு செய்து கராச்சி விமான நிலையம் திரும்பிய 23 ஷியா முஸ்லிம்கள் தற்கொலை படை தாக்குதலில் பலியாகினர்.
2013 செப்டம்பர் 22:
பெஷாவர் நகர் தேவாலயத்தில் இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதில் 85 பேர் உயிரிழந்தனர்.
2013 ஆகஸ்ட் 17:
பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலியாகினர். 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
2013 ஜூன் 22:
நங்கபர்வதம் மலைச்சிகரத்தில் ஏறிய 10 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
2013 மார்ச் 3:
கராச்சி மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 45 ஷியா முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.
2013 ஜனவரி 10:
குவாட்டா நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.
2012 நவம்பர் 22:
ராவல்பிண்டியில் ஷியா முஸ்லிம்கள் ஊர்வலத்தில் தலிபான் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் பலியாகினர்.
2012 ஜனவரி 5:
தலிபான்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த 15 எல்லை பாதுகாப்பு படையினரை சுட்டுக் கொன்றனர்.
2011 செப்டம்பர் 20:
குவெட்டா நகரில் பயணிகள் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 ஷியா முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.
2011 மே 13:
ஷாப்குவாதர் நகரில் போலீஸ் ஆள்தேர்வு முகாமில் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
2010 நவம்பர் 5:
தாரா ஆதம் கெல் நகரில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 67 பேர் உயிரிழந்தனர்.
2010 செப்டம்பர் 1:
குவாட்டா நகரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தனர்.
2010 ஜூலை 9:
முகமது பழங்குடியின பகுதியில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 102 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT