Published : 18 Dec 2014 01:41 PM
Last Updated : 18 Dec 2014 01:41 PM
சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரால் கொல்லப்பட்ட 230 பேரின் உடல் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பதை அங்குள்ள கண்காணிப்புக்குழு கண்டறிந்துள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் ஆக்கிரமிப்பு செய்துவரும் ஐ.எஸ். இயக்கத்தினர் சன்னி பிரிவினரின் தலைமையிலான தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தோடு ஷியா பிரிவு மக்களை நோக்கி தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் சிரியாவில் போர் சூழல் குறித்து கண்காணித்து வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் சிரியாவின் கிழக்கே உள்ள அல்-காஷ்யாவில் சுமார் 230 பேரின் உடல்கள் குவியலாக புதைக்கப்பட்டிருப்பதை அங்கு உள்ள பழங்குடியின மக்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.
மேலும், ஷியா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் மாயமாகி உள்ளதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராக்கின் வடக்கே ஸ்வாத் மற்றும் கிழக்கு சிரியா பகுதிகள் பலவற்றை ஐ.எஸ். அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT