Last Updated : 22 Dec, 2014 05:33 PM

 

Published : 22 Dec 2014 05:33 PM
Last Updated : 22 Dec 2014 05:33 PM

ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் புதிய அதிவேக சூப்பர் டியூப் ரயிலை அறிமுகப்படுத்தும் வேலையில் நூற்றுக்கும் அதிகமான தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர் டியூப் ரயில் 35 நிமிடங்களில் இலக்கை சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 760 மைல்கள் வேகம் செல்லுமாம் இந்த சூப்பர் டியூப் ரயில்!

இந்த புதிய டியூப் ரயிலை வடிவமைக்க ஹைபர்லூப் டிரான்ஸ்பொடேஷன் டெக்னாலஜிஸ் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. டெல்சா மோட்டார் நிறுவன சி.இ.ஓ-வும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான இலான் மஸ்க் என்பவரின் கனவுத் திட்டம் இது. இன்னும் 10 ஆண்டுகளில் பயணிகள் இந்த புதிய டியூபில் பயணம் செய்யலாம் என்று கூறுகிறார் இவர்.

உலகம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1000 மைல்கள் தூரம் உள்ள நகரங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இந்த ‘ஹைபர் லூப்’ மட்டுமே பயன்படும் என்கிறார் மஸ்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x