Last Updated : 24 Nov, 2014 03:06 PM

 

Published : 24 Nov 2014 03:06 PM
Last Updated : 24 Nov 2014 03:06 PM

டைம் இதழின் 2014-ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு பட்டியலில் செல்ஃபி ஸ்டிக்

டைம் இதழில் 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் 'செல்ஃபி ஸ்டிக்' இடம்பெற்றுள்ளது.

வாஷிங்டனில் இருந்து வெளியாகும் 'டைம்' நாளிதழ வெளியிட்டுள்ள 2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் 'செல்ஃபி ஸ்டிக்' இடம்பெற்றுள்ளது.

2013-ஆம் ஆண்டு ஸ்மார்ட்ஃபோன்களின் மூலமாக சுயப்படம் எடுக்கும் 'செல்ஃபி' தொழில்நுட்பம் அறிமுகமானது. அந்த ஆண்டு 'செல்ஃபி' என்பது ஒரு வார்த்தையாகவும் படம் எடுக்கும் உத்தியாகவும் அறிமுகமான நிலையில் வெகு விரைவில் 'செல்ஃபி' குறித்த ஆர்வம் உலகம் முழுவதிலும் பரவலாகி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து அறிமுகமான 'செல்ஃபி ஸ்டிக்'-கும் புகழ் பெற்றுவிட்டது என்று 'டைம்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ஃபோனை நீண்ட குச்சியின் முனையில் அமர்த்தி, அதன் மூலம் நாம் வேண்டிய கோணத்தில் செல்ஃபி எடுக்க உதவும் இந்த எளிய உபகரணம் தான் 'செல்ஃபி ஸ்டிக்'. தற்போது உலகம் முழுவதிலும் இந்த உபகரணம் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. இதனை கொண்டே உலகின் உயரமான கட்டடங்கள் மற்றும் மலை உச்சியில் நின்றபடி பலர் செல்ஃபி சாகசங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

மேலும், 'டைம்' இதழின் ஆய்வின்படி கால் பங்குக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தன்னைத் தானே எடுத்த செல்ஃபி படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இதில் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன், அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து பொது மக்கள் வரை அனைத்து தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x