Published : 26 Nov 2014 12:15 PM
Last Updated : 26 Nov 2014 12:15 PM

தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்: சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு

மும்பையில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலை சார்க் மாநாட்டில் நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவா தத்தை ஒழிப்பதற்கும், நாடு கடந்த குற்றச் செயல்களைத் தடுப் பதற்கும் சார்க் நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சார்க் அமைப்பு நாடுகளின் 18-வது மாநாடு நேற்று தொடங்கியது. இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நினைவுதினம் இன்று (நேற்று) அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாதத்தையும், நாடு கடந்த குற்றச் செயல்களையும் தடுக்க சார்க் அமைப்பு நாடுகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும்.

வியாபாரிகளுக்கு விசா

சார்க் நாடுகளைச் சேர்ந்த வியாபாரிகள் இந்தியா வருவதற்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான பிஸினஸ் விசா வழங்க முடிவு செய்துள்ளோம். விரைவில் சார்க் பிஸினஸ் டிராவலர் கார்டை தயாரித்து அளிக்க திட்டமிட்டுள் ளோம்.

நான் பிரதமராகப் பதவியேற்ற போது, நீங்கள் அனைவரும் (சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள்) வந்திருந்தது மிகவும் மகிழ்ச்சி யளித்தது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் கூட்டாளி களாகச் செயல்பட்டால்தான் வளர்ச்சி வேகமாக நடைபெறும்.

ஆப்கானிஸ்தான் அதிபராக பொறுப்பேற்றுள்ள அஷ்ரப் கனிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ராஜபக்சவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வர்த்தக மேம்பாடு

உலக அளவில் 5 சதவீதத் துக்கும் குறைவான வர்த்தக நடவடிக்கைகளே சார்க் நாடுகள் இடையே நடைபெறுகின்றன. இதை அதிகரிக்க வேண்டும்.

தெற்காசியாவைச் சேர்ந்த 5 நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு இறக்குமதி செய்யப் படும் 99.7 சதவீத பொருட் களுக்கு வரி விலக்கு அளித்துள் ளோம். இதை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த விரும்பு கிறோம். இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கடந்த 10 ஆண்டு காலத்தில் 8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி அளித்துள்ளோம். இந்தியாவில் கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக முன்னுரிமை அளித்து வருகிறேன். சார்க் நாடுகளை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தவும், வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தவும் நிதியுதவி அளிக்க சிறப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த விரும்புகிறேன்.

உங்கள் நாடுகளில் இந்திய முதலீடுகளை ஈர்த்து, இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுங்கள், உற்பத்தி செய்த பொருட்களை இந்திய சந்தைக்கு அனுப்பி வையுங்கள். அதே போன்று உங்கள் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும்.

சார்க் செயற்கைக்கோள்

சார்க் பிராந்திய டி.பி. மற்றும் எச்.ஐ.வி.க்கான அதிநவீன ஆய்வகத்தை தொடங்குவதற்கான நிதி போதுமானதாக இல்லை. இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதியை இந்தியா அளிக்கும். போலியோ நோயை தடுப்பதற்கான உதவிகளை சார்க் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும்.

சார்க் நாடுகளைச் சேர்ந்தோர் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கு உடனடியாக மருத்துவ விசா வழங்கப்படும்.

நமது கூட்டமைப்பில் உள்ள நாடு களில் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வசதியாக செயற்கைக் கோளை 2016-ம் ஆண்டு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x