Last Updated : 13 Nov, 2014 09:53 AM

 

Published : 13 Nov 2014 09:53 AM
Last Updated : 13 Nov 2014 09:53 AM

‘ஹாங்காங் போராட்டத்தை அமெரிக்க தலையீடு இல்லை’ - சீன அதிபர் முன்னிலையில் ஒபாமா அறிவிப்பு

ஜனநாயக சீர்திருத்தம்கோரி ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அமெரிக்கா எந்த விதமான தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்ட அவர், ஹாங்காங் போராட்டத்தில் அமெரிக்காவின் தலையீடு உள்ளது என்ற சீன ஊடகங்களின் கருத்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஹாங்காங் பிரச்னையில் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் எந்தவிதமான தலையீட்டையும் செய்யவில்லை. ஹாங்காங் மக்களும் சீன மக்களும் இணைந்து தீர்க்க வேண்டிய பிரச்னை இது" என்றார்.

அப்போது உடனிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஹாங்காங் போராட்டம் சட்டவிரோதமானது. இது முற்றிலும் சீனாவின் பிரச்னை. இதில் எந்த ஓர் அந்நிய நாடும் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x