Last Updated : 01 Aug, 2017 12:52 PM

 

Published : 01 Aug 2017 12:52 PM
Last Updated : 01 Aug 2017 12:52 PM

சீனா தனது நிலத்தின் சிறு பகுதியையும் இழக்காது: ஜி ஜின்பிங்

 

பிற நாடுகளிடம் சீனா தனது நிலத்தின் சிறு பகுதியைக் கூட இழக்காது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை ராணுவ இயக்கத்தின் 90-வது ஆண்டு விழா பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சுமார் 1 மணி நேரம் உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள், சீன மக்கள் விடுதலை ராணுவ இயக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, "சீன மக்கள் அமைதியை பொக்கிஷமாக கருதுபவர்கள். எங்களுக்கு போரில் ஈடுபட விருப்பமில்லை. எனினும் அதனை எதிர்கொள்ளும் நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம்.

எந்தவொரு அமைப்பும், எந்த ஒரு நாடும் சீனாவின் ஒரு சிறு பகுதியைக் கூட கைபற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x