Published : 25 Aug 2017 03:07 PM
Last Updated : 25 Aug 2017 03:07 PM
நிறவெறி தூண்டுதலினால் இரண்டு கொலைகளைச் செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மார்க் அஸேவுக்கு இதுவரை பயன்படுத்தாத ஊசி மருந்து மூலம் புளோரிடாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
53 வயது மார்க் அஸே கருப்பரினத்தவரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற முதல் வெள்ளைக்குற்றவாளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழன் மாலை 6.22 மணியளவில் அஸே மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எடியோமிடேட் என்ற மயக்க ஊசி மருந்துடன் தொடங்கி 3 ஊசிமருந்துகள் ஏற்றி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1987-ம் ஆண்டு கருப்பரினத்தைச் சேர்ந்த ராபர்ட் லீ புக்கர் என்பவரைக் கொடூரமாகப் படுகொலை செய்த அஸே, நிறவெறிக்கூச்சல் செய்ததாக வழக்கறிஞர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர். இவர் மீது வெள்ளை-ஸ்பானிய நபர் ராபர்ட் மெக்டோவல் என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் இருந்தது.
கடைசியாக எதுவும் கூற விரும்புகிறீர்களா என்று அஸெயிடம் கோர்ட்டில் கேட்ட போது, “இல்லை சார், நன்றி” என்றார்.
முதல் ஊசிப் போடப்பட்டவுடன் மரண தண்டனை நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அவர் கால்கள் லேசாக அதிர்ந்தன. அவர் உயிர் பிரிந்தது.
புளோரிடாவில் கருப்பர் ஒருவரைக் கொன்றதற்காக வெள்ளை இனத்தவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது முதல் முறையாகும், மாறாக வெள்ளை இனத்தவரை கொன்றதாக சுமார் 20 கருப்பர்கள் மரண தண்டனை பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளனர்.
முதலில் எடியோமிடேட் பிறகு ரூகோரியம் புரோமைட், இது முடக்கு வாதம் உருவாக்குவதாகும், அடுத்து பொட்டாசியம் அசிடேட், இது இருதயச் செயல்பாட்டை நிறுத்துவதாகும். புளோரிடா கவர்னராக ரிக் ஸ்காட் பொறுப்பேற்ற பிறகு இது 24-வது மரண தண்டனையாகும். வேறு எந்த கவர்னர் ஆட்சியிலும் இந்த அளவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT