Published : 03 Aug 2017 04:49 PM
Last Updated : 03 Aug 2017 04:49 PM
தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 23 பேர் பலியாகியுள்ளனர். பல லட்ச கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து உள்துரை அமைச்சகம் தரப்பில், ”தாய்லாந்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு 23 பேர் பலியாகினர். சுமார் 10 மாகாணங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 7,21,500 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பல லட்ச கணக்கில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT