Published : 06 Nov 2014 02:14 PM
Last Updated : 06 Nov 2014 02:14 PM
ஸ்பெயினில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு மேம்பாலம் ஒன்றில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த சுற்றுலா பெண் பயணி கீழே தவறி விழிந்து மரணம் அடைந்தார்.
ஸ்பெயினின் குடால்க்வீர் நதிக்கரைப் பகுதியில் 19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ட்ரியானா மேம்பாலம் அமைந்துள்ளது.
அங்கு திங்கள்கிழமை சுற்றுலாவுக்கு சென்ற மருத்துவ மாணவி சில்வியா ராச்சேல் (23) மேம்பாலத்திலிருந்து தொங்கியபடி தனது செல்ஃபோனில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது தவறி அங்கிருந்து 15 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அடுத்து சுற்றுலா பயணிகளிடையே அங்கு சோகம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேம்பாலத்தின் கீழே உள்ள குடால்க்வீர் நதிக்கரையில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT