Published : 07 Aug 2017 08:30 AM
Last Updated : 07 Aug 2017 08:30 AM
‘‘அணுஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வடகொரியா முன்வரவேண்டும்’’ என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ வலியுறுத்தி உள்ளார்.
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஆய்வு களை நடத்தி வருகிறது. இதை யடுத்து அந்நாட்டின் மீது ஐ.நா. பொருளாதார தடையை கடுமை யாக்கி உள்ளது. மேலும், வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் நிலை வரும் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. அதேவேளையில் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியாவும் மிரட்டி வருகிறது. எனவே கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய பிராந்திய பாதுகாப்பு அமைப்பின் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மணிலா வந்துள்ளனர். சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ நேற்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி ஹாங் யோவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் வாங் இ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அணுஆயுத சோதனை, ஏவு கணை சோதனைகளை நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தை நடத்து வது குறித்து நல்ல முடிவு எடுக்கும்படி ரி ஹாங் யோவை கேட்டுக் கொண்டேன். ஐ.நா.வின் சட்டத்திட்டங்களை மீறி செயல்பட வேண்டாம். ஏவுகணை சோதனைகள் மூலம் சர்வதேச சமூகத்தை பதற்றமடைய செய்ய வேண்டாம் என்று வடகொரிய அமைச்சரிடம் கூறினேன்.
சீனா தலைமையில் வட கொரியா, தென் கொரியா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 6 நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலி யுறுத்தினேன். அமெரிக்காவும் வடகொரியாவும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் விமர்சனங் களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி என்று வடகொரிய அமைச்சர் ரி ஹாங் யோவிடம் எடுத்துரைத்தேன்.
மேலும், தென் கொரியாவும் அமெரிக்காவும் பதற்றத்தை அதிகரிக்காமல் அனைவரும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
இவ்வாறு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT