Published : 14 Aug 2017 11:36 AM
Last Updated : 14 Aug 2017 11:36 AM
கிழக்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவிலுள்ள துருக்கி உணவு விடுதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் தரப்பில், “ புர்கினோ ஃபேசோவிலுள்ள துருக்கி நாட்டைச் சேர்ந்த உணவு விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் உணவு விடுதியிலிருந்த 17 பேர் பலியாகினர். இதில் பல வெளி நாட்டவரும் அடக்கம்.
மேலும் இந்தத் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக போலீஸாரும் பதில் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளுடனான இந்தச் சண்டை சுமார் ஏழு மணி வரை நடைபெற்றது" என்றார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT