Published : 26 Nov 2014 05:05 PM
Last Updated : 26 Nov 2014 05:05 PM
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் இன்று (26-ம் தேதி) தொடங்கியது. மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "சார்க் நாடுகளுடன் என்றும் இணக்கமான சூழலில் இருக்க பாகிஸ்தான் விரும்புகிறது.
பாகிஸ்தான் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இளம் வயதினராக இருக்கின்றனர். ஆனால் அன்னிய முதலீடு முற்றிலும் குறைவாகவே உள்ளது. உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானில் முதலீடு குறைந்த அளவிலேயே உள்ளது.
இந்த நிலை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனை தடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாக உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சி பின்னடைவில் இருப்பது எதிர்காலத்தை பாதிக்கும். இதற்காக பாகிஸ்தானில் வெளிநாட்டவர்களின் முதலீட்டை ஈர்க்க விசா விவகாரங்களின் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT