Published : 08 Jul 2017 06:06 PM
Last Updated : 08 Jul 2017 06:06 PM
உலகம் முழுவதும் அணுசக்தி ஆயுதங்களை தடை செய்ய இன்று உறுப்பு நாடுகளுடன் ஐ.நா.வில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சில பத்தாண்டுகள் கடந்த நிலையில் நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு அணு ஆயுதப் போரைத் தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைமூலம் நிறைவேற்றப்பட்டது. இது நடைமுறைக்கு வந்தால் உலகம் முழுவதும் புழங்கிவரும் அணு ஆயுதங்களுக்கும் அதன் பயன்பாடுகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு செய்தியின் விவரம்:
192 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் ஒப்புதலோடு, இந்த வார இறுதியில் (சனிக்கிழமை) 10 பக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 'அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தம்', நியூயார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், பேச்சுவார்த்தை மாநாட்டின் இறுதிக் கூட்டத்தில் இம்முடிவு முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் 20 ம் தேதி நடைபெற உள்ள ஐநாவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கான ஆவணத்தில் ஏதோஒரு உறுப்பு நாட்டின் கையொப்பம் பெறுவதிலிருந்து இதற்கான நடைமுறை தொடங்கிவைக்கப்படும்.
இந்த உலகளாவிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் 50 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட 90 நாட்களுக்குப் பிறகு சட்டபூர்வமாகிவிடும். 70 ஆண்டுகளாக இந்த சட்ட விதிமுறைக்காக உலகம் காத்திருக்கிறது," என ஜெனீவாவில் கோஸ்டா ரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபை தூதர் எலாய்நே ஜி.வொய்ட்டே ஜி தெரிவித்தார்.
உலகளாவிய அணு ஆயுதத் தடைக்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டு, ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட தருணத்தில் பிரதிநிதிகள் கூடிய அறை மகிழ்ச்சியாகவும் கைத்தட்டல்களோடும் காணப்பட்டது.
இக் கூட்டத்தில் நெதர்லாந்து மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்நாடு தற்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நேட்டோ நாடுகளின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா, சீனா, பிரான்ஸ், வட கொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய 9 நாடுகள் ஆரம்பம் முதலே ஒப்பந்தத்தை புறக்கணித் தன. அந்த நாடுகளும் அவற்றின் ஆதரவு நாடுகளும் வாக்கெடுப் பில் பங்கேற்கவில்லை. அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை வெளிப்படையாகவே அந்நாடுகள் புறக்கணித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT