Published : 16 Nov 2014 10:02 AM
Last Updated : 16 Nov 2014 10:02 AM

ஒபாமா, அபோட்டுடன் கட்டிட கலை நிபுணரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொண்ட மோடி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியாவுடன் உணர்வுபூர்வமாக தொடர்புள்ள கட்டிட கலை நிபுணரின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோருடன் மோடி பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் ட்விட்டர் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரம்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல கட்டிட கலை நிபுணர் வால்டர் பர்லே கிறிபின். ஆஸ்திரேலிய தலை நகர் கான்பெர்ரா நகர கட்டுமானத்தை இவர்தான் வடிவமைத்தார். இவரது உடல் இந்தியா வில் லக்னோ நகரில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஒபாமா, அபோட் ஆகியோருடன் பகிர்ந்து கொண்ட மோடி, நமது நாடுகளிடையே இதுபோன்ற உணர்வுபூர்வமான தொடர்புகள் உள்ளது என்று சுட்டிக் காட்டினார். அதனை ஒபாமாவும், அபோட்டும் ஆர்வத்துடன் கேட்டனர்.

லக்னோவில் வால்டர் பர்லே அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் கிறிஸ்தவ முறைப்படி அமைக்கப்பட்ட கல்லறையும் உள்ளது.

1937-ம் ஆண்டு தனது 61-வது வயதில் வால்டர் பர்லே மறைந்தார். உலகின் தலைசிறந்த கட்டிட கலை நிபுணரான அவர், பல நவீன கட்டுமானங் களை உருவாக்கினார். வீட்டு முன்பு கார்களை நிறுத்த அமைக்கப்படும் “கார் போர்ட்” அவரது கட்டிட அமைப்புகளில் ஒன்று.

28 ஆண்டுகளில் 350 கட்டிடங்களையும், பல்வேறு நகர கட்டுமான திட்டங்களையும் அவர் வடிவமைத்துள்ளார். மாளிகைகளின் உள் அலங்கார வடிவமைப்பிலும் வால்டர் பர்லே திறமை வாய்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x